சத்தமே இல்லாமல் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி! கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை!  - Seithipunal
Seithipunal


திமுகவை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர், ஒரு திமுக கட்சி பிரமுகரிடம், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு குறித்து பேசுவது போல் ஒரு ஆடியோ வைரல் ஆகியது. அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

"என் பெயரை சொல்லும் போது யாரும் கை தட்டவில்லை. அப்பா பாதுகாப்பில் உள்ள எ.வ. வேலு மகன் கம்பன் பெயரை சொன்னால் ஜால்ரா பசங்க கை தட்டுறானுங்க. இன்னும் கட்சியில ஒரு முடி(மயிர்)யும் புடுங்கவில்லை. எ.வ. வேலு பள்ளிக்கூடம், காலேஜ், ஐடிஐ ன்னு 8 கல்வி நிறுவனங்களை வைத்துள்ளார். தமிழகத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி உள்ளது. மெடிக்கல் காலேஜ் கட்டுகிறார். கரூரில் 500 கோடி ரூபாய்க்கு பைனான்ஸ் தொழில், சினிமாபட பைனான்ஸ் தொழில் செய்கிறார்.

டிவி தொடர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு முறை அமைச்சராக இருந்துள்ளார். ஆறாவது முறையாக எம்எல்ஏ ஆக இருக்கிறார். கருணாநிதி வாழ்க., ஸ்டாலின் வாழ்க., எ.வ. வேலு வாழ்கன்னு சொல்லிட்டு., கட்சிக்கு ரத்தை சிந்துனவன் கடைசியா செத்து போய்டணும். அப்பனும் மகனும் பிழைக்கனுமா? இப்படி பிழைப்பு நடத்தும் எ.வ. வேலு ஏன் என் பிழைப்ப கெடுக்குறான்.

கருணாநிதியாக இருந்தாலும், அவர் பிள்ளையாக இருந்த ஸ்டாலின் ஆக இருந்தாலும் சேர்த்துதான் சொல்கிறேன். எ.வ. வேலு மகன் கம்பனுக்கு ஜால்ரா போடுறானுங்க., கட்சிக்காக உழைத்த நாங்கள் எல்லாம் மண்ணா தான் போகணுமா?"என்று அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆடியோ வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆடியோ குறித்து எ.வ. வேலு தெரிவிக்கையில், "எனக்கு தமிழகத்தில் ஸ்பின்னிங் மில்லும் இல்லை, 6 ஆயிரம் ஏக்கர்கள் நிலமும் இல்லை. 500 கோடியில் பைனான்ஸ் தொழிலும் இல்லை. எல்லாம் பொய்" என்று தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் அந்த ஆடியோவில் பேசியதாக சொல்லப்படும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் என்பவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin and Duraimurugan Action Party Supporter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->