திமுக சிறு துரும்பையும் பெரிதாக்குகிறது” தமிழகத்திலும் பீகார் மாடல் வேண்டும்…ஆட்சியில் பங்கு வேண்டும்! – டாக்டர் கிருஷ்ணசாமி - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி உடையார்பட்டியில் ஊடகங்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்ததோடு, பிகார் மாடல் போல கூட்டணி அமைச்சரவை தமிழகத்திலும் அமைய வேண்டும் என கூறியுள்ளார்.

தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் கூட பாதாள சாக்கடை, சாலை, குடிநீர், பேருந்து வசதி இல்லாமல் மக்கள் அவதி படுவதாக தெரிவித்தார்.

மலையிலுள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி ஊத்து பகுதிகளில் இரண்டு மாதமாக ரேஷன் வழங்கப்படவில்லை என்பது மனித உரிமை மீறலாகும் என்றும், மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டதையும் அவர் கண்டித்தார்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை மிகுந்து நடைபெறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். கேரளம், கர்நாடகம், மாலத்தீவு தேவைக்கு ஏற்ப தமிழகத்தில் கல், மண் வெட்டப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

மத்திய அரசு – மாநில அரசு மோதல்களைப் பற்றி பேசும்போது,“சிறு துரும்பையும் பெரிதாக்குவதே திமுக அரசின் அரசியல் உத்தி. மத்திய அரசை குற்றம் சாட்டுவதால் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படாது”என்று கிருஷ்ணசாமி விமர்சித்தார்.

மேலும்,“தமிழகத்திலும் பிகார் மாடல் போல கூட்டணி அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் அரசு வர வேண்டும். ஜனவரி மாதத்திற்குப் பிறகு எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம்”என்று அவர் கூறியுள்ளார். கிருஷ்ணசாமியின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK is making even a small mistake bigger We want the Bihar model in Tamil Nadu to We want a share in the government Dr Krishnasamy


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->