பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கம்..!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த சாலிகிராமத்தில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக துணை பொது செயலாளரும் எம்பியுமான கனிமொழி, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் திமுக நிர்வாகிகள் பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த சம்பந்தப்பட்ட இரு திமுக நிர்வாகிகளும் கூட்ட நெரிசலில் தங்களது கை பெண் போலீசார் மீது தவறுதலாக பட்டிருக்கலாம் என்றும் தங்களுக்கு அது போன்ற நோக்கம் ஏதும் இல்லை எனவும் தெரிவித்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது பெண் போலீஸ் அளித்த புகார் வாபஸ் பெறப்பட்டது. 

இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சென்னை தெற்கு மாவட்ட கலைஞர் நகர் வழக்கு பகுதி 129 வது வட்டத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவ பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு கட்சி நிர்வாகிகளை தற்காலிகமாக நீக்கிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK executives who sexually harassed female police were temp expelled


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->