தி.மு.க.வினரால் எங்களுக்கு ஆபத்து - பா.ஜ.க.வினர் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் கடந்த 31ஆம் தேதி நடந்த கல்குவாரிகளுக்கான ஏலத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.க கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக தி.மு.கவைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அவர் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது, ''பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 30 ஆம் தேதி நடந்த கல் குவாரிகளுக்கான ஏலத்திற்கான ஒப்பந்தம் கோரி விலை புள்ளி அளிக்க சென்ற என்னை, எனது தம்பி, தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் ஆகியோரை தி.மு.கவினர் தடுத்து நிறுத்தினர். 

பின்னர் அலுவலகத்திற்குள் நுழைந்து எங்களிடம் இருந்த ஒப்பந்த படிவத்தை கிழித்து எரிந்து சாதி பெயரை தெரிவித்து தகாத வார்த்தைகளால் கடுமையாக தீட்டி அரை நிர்வாணப்படுத்தி தாக்கினர். 

இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் நாங்கள் சிகிச்சை பெற்று பெற்றோம். மேலும் தி.மு.கவினர் எங்களது வீடுகளுக்கு எங்களை தேடி வருவதால் நாங்கள் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி இருக்கின்றோம். 

தி.மு.கவினர் எங்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் எங்களை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK danger to us  BJP complains


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->