கிருஷ்ணகிரி "ராணுவ வீரர் கொலை வழக்கு".. திமுக கவுன்சிலரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர்  உட்பட 3 பேரில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ராணுவ வீரர்கள் பிரபாகரன் மற்றும் பிரபு ஆகியோர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி குடிநீர் தொட்டியின் அருகில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பொழுது அவ்வழியாக சென்ற நாகரசம்பட்டி பேரூராட்சி மன்ற திமுக கவுன்சிலர் சின்னசாமி தட்டி கேட்டுள்ளார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தன் குடும்ப உறுப்பினர்களுடன் சென்ற சின்னச்சாமி, ராணுவ வீரர்கள் பிரபு, பிரபாகரன், அவர்களது தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன் ஆகியோரை கடுமையாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி மாலை ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நாகரசம்பட்டி காவல் நிலையத்தினர் கொலை வழக்கு பதிவு செய்து திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன் புலிப்பாண்டி, தம்பி காளியப்பன், உறவினர் மாதையன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவருடைய மகன் புலிப்பாண்டி, சகோதரர் காளியப்பன், உறவினர் மாதையன் ஆகிய மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சுகேந்திரன் குற்றவாளிகள் கைதாகி விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் முன்கூட்டியே ஜாமீன் கோரி முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகி உள்ளதால் ஜாமின் வழங்கக் கூடாது என வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK councilor dismissed bail plea in army soldier murder case


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->