ரோடு போடணுமா? ஜிஎஸ்டி உடன் கமிஷன் கேட்கும் திமுக செயலர்?! வைரலாகும் வீடியோ!  - Seithipunal
Seithipunal


நெல்லை : ரோடு போடும் பணிக்கு 18 % கமிஷன் தொகை வழங்க வேண்டும் என்று, ஒப்பந்ததாரரிடம் நெல்லை மாநகர திமுக செயலர் சுப்பிரமணியன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் திருநெல்வேலி மாநகர திமுக செயலர் சுப்பிரமணியன் உரையாடுவது தெரியவந்துள்ளது. வீடியோவை பத்தி செய்தவர் ஒரு ஒப்பந்ததாரர் என்பதும் அவர்களின் உரையாடல் மூலம் அறிய முடிகிறது.

அவர்களுக்கு இடையேயான அந்த உரையாடல் :

திமுக பிரமுகர் : ஊரக வளர்ச்சி முகமை சாலைப்பணி உங்களுக்கு கிடைக்க வழிவகை செய்கிறேன். ஒப்பந்தம் ஓகே ஆனால், 18 சதவீதம் கமிஷன் ஜிஎஸ்டி உடன் கொடுக்க வேண்டும்.

கமிஷன் பெறுவதற்கு மாவட்டத்தில் தொகுதிக்கு ஒருவர் என்று பிரிக்கப்பட்டுள்ளது. 
ராதாபுரத்துக்கு அப்பாவு அண்ணன், 
பாளையங்கோட்டைக்கு வகாப், 
அம்பாசமுத்திரத்துக்கு அண்ணாச்சி. 
திருநெல்வேலிக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பொறுப்பு எடுத்து உள்ளார்.

நமக்கு அமைச்சர், அவர் ஓகே சொன்னதும் கமிஷனை கொடுத்துவிடுங்கள். இங்கு மட்டுமல்ல மதுரை, சென்னை, காஞ்சிபுரத்திலும் இதே 18 % கமிஷன் தான். ஆனால் தூத்துக்குடியில் கமிஷன் 22 சதவீதத்துக்கும் அதிகம்.

நெல்லை மாநகரத்தில் உள்ள பணிகள் எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கு. நான் இந்த கமிஷனை பிரித்து கொடுக்கணும். இன்னிக்கு நீங்க பணம் கொடுத்தா, டெண்டரை நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம். அப்போது ஒப்பந்ததாரர் ‘அவகாசம் வேண்டும். ஜிஎஸ்டி தொகை ரூ.55 லட்சம் வரை வருகிறது. அதை கழித்து கொள்ளலாமே’ என்று சொல்கிறார். அதற்க்கு திமுக பிரமுகர் சுப்பிரமணியன் ஜிஎஸ்டி தொகை காட்டியே ஆகவேண்டும் என்று பதில் கொடுக்கிறார்". இப்படியாக அந்த வீடியோ 8 நிமிடம் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ குறித்த உண்மை தன்மை இன்னும் உறுதியாகவில்லை. அதே சமயத்தில் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து இதற்க்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Commission Nellai Viral Video


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->