அஸ்திரத்தை கையில் எடுத்து, அழைப்பு விடுத்த தலைமை... தயாராகும் உடன்பிறப்புகள்..!! - Seithipunal
Seithipunal


தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 16 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று காலையே இந்த கூட்டமானது துவங்கியது. ஏற்கனவே மின் கட்டணம் தொடர்பாக ஆலோசனை செய்ய இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த கூட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருப்புக்கொடி போராட்டம் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் தொடர்பாக வரும் 21 ஆம் தேதியில் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு தொடர்பாக கண்டிப்பு கண்டனம் தெரிவிக்கப்பட்டு, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கூட்டமானது நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், கருப்பு கொடி போராட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Announce Protest July 21 about Electricity charges in Tamilnadu


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal