#சேலம் || ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கருப்பு கொடி போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனை அடுத்து நேற்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு ஆடை அணிய விதித்திறந்த தடை நீக்குவதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சாலை மார்க்கமாக சேலம் சென்றுள்ளார். சேலம் வரும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK alliance parties black flag protest against governor in Salem


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->