அதிமுக முன்னாள் அமைச்சரை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் - அரசியலில் நடந்த திடீர் திருப்பம்.!
dmdk public secretary premalatha vijayakant meet admk ex minister kc veeramani
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது முதலே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது. எதிர்க்கட்சியான அதிமுக மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

அதேபோல் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்று ஒவ்வொரு ஊருக்கும் சென்று பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த தேமுதிக, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் கடலூர் மாநாட்டில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பத்தூரில் நடைபெற்ற ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்துக்கு இடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் KC வீரமணியை, தேமுதிக தலைவர் LK சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோருடன் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். KC வீரமணியுடன் நடந்த இந்த திடீர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
English Summary
dmdk public secretary premalatha vijayakant meet admk ex minister kc veeramani