ராகுலின் வருகையை அரசியலாக்க கூடாது - பிரேமலதா விஜயகாந்த்.! 
                                    
                                    
                                   DMDK Premalatha Vijayakanth Talks about Ragul Avaniyapuram Jallikattu Visit 
 
                                 
                               
                                
                                      
                                            உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டானது இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு திமுக உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் ராகுல் காந்தி ஆகியோர் வருகை தந்திருந்தனர். 
இதன்பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, " பலர் முன்னதாக என்னிடம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்தார்கள். ஆனால், இன்று நான் நேரில் பார்க்கையில் அப்படி எதுவுமே இல்லை. தமிழர்கள் ஏன் ஜல்லிக்கட்டை விரும்புகிறார்கள் என்பதை இப்போது புரிந்துகொண்டேன் " என்று தெரிவித்தார். 

ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும், ட்விட்டர் தளத்தில் #GoBackRahul என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில், ராகுலின் வருகையை அரசியலாக பார்க்க கூடாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், " ராகுல் காந்தியின் அவனியாபுரம் வருகையை அரசியலாக பார்க்க கூடாது. ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் காந்தி நேரில் வந்து பார்த்ததில் தவறுகள் எதுவும் இல்லை " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       DMDK Premalatha Vijayakanth Talks about Ragul Avaniyapuram Jallikattu Visit