5+1 யார் யார்? தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் - பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம்  சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கையெழுத்தானது.

இந்த தேர்தல் ஒப்பந்தத்தின் போது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ் பி வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், தேமுதிக தரப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவை தலைவர் இளங்கோவன் துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

இந்த தொகுதி பங்கீடு ஒப்பந்தத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவிக்கையில், "இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான இந்த கூட்டணி மகத்தான ஒரு வெற்றியை பெரும். தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவி தருவதாகவும் அதிமுக உறுதி அளித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் பல ரைடுகள் நடக்கிறது. அரசியலில் இருந்தாலே ரைடுகள் வரத்தான் செய்யும்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தேமுதிக சார்பாக களமிறங்கும் வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 

* மத்திய சென்னை தொகுதிக்கு தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி,
* திருவள்ளுவர் தனி தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி, 
* கடலூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து,
* தஞ்சாவூர் தொகுதியில் மாவட்ட செயலாளர் ராமநாதன் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கியமாக விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் ஒரு தகவலாக, அதிமுக ஒதுக்க உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பிரேமலதா விஜயகாந்தின் சகோதரரும், தேமுதிகாவின் துணைச் செயலாளருமான சுதீஷ் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK candidate list info 2024


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->