அரசு திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் பல்வேறு துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் நிர்வாக இயக்குநருமான கே.பி. கார்த்திகேயன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை, வருவாய் துறை , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை , நெஞ்சாலைகள் துறை , காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு தங்கள் துறை வாயிலாக நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து  துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக விளக்கினர்.

முன்னதாக திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணியை ஆய்வு செய்தனர். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2025-26 ஆய்வின் போது அமைக்கப்பட்ட சாலையின் அகலம், கனம் ஆய்வு செய்தனர்.மேலும் சாலை அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ள ஜல்லி கற்களின் தரத்தை சல்லடை பகுப்பாய்வு பரிசோதனை செய்து ஆய்வு செய்தனர்.மேலும் சாலை பணியை விரைந்து முடிக்க தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் நிர்வாக இயக்குநர் கே.பி. கார்த்திகேயன்  உத்தரவிட்டார்.
 
மேலும், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட  மாறன் நகரில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் மற்றும் பனவேடு தோட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

District Collector Prathap reviews government schemes and their implementations


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->