தேர்தல் பணியில் அதிருப்தி! அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு கிடைக்கவில்லை...! - பகீர் குற்றச்சாட்டு
Dissatisfaction election work Government employees did not receive postal votes alleges
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் தாமதமாக வழங்கப்பட்டதால், வாக்களிக்கும் உரிமையே கேள்விக்குறியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்காக சுமார் 3.40 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் முன்கூட்டியே படிவம்-12 மூலம் தபால் வாக்கு கோரிக்கை செய்திருந்த போதிலும், பலருக்கு வாக்குச் சீட்டு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
அதேபோல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு செயல்முறையும் பல இடங்களில் சீர்குலைந்ததாக கூறப்படுகிறது.
பல்லாவரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில், தபால் வாக்கு வழங்கலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அரசு ஊழியர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.
எந்த தெளிவான வழிகாட்டுதலும் இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழகம் முழுவதும் பல தொகுதிகளில் இதேபோன்ற சிக்கல்கள் நிலவியதால், பலர் வாக்களிக்க முடியாமல் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் தரப்பில், தபால் வாக்கு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இன்னும் அவகாசம் உள்ளதால் அனைவருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Dissatisfaction election work Government employees did not receive postal votes alleges