கால் இல்லாத இளம்பெண்ணிடம் கார்.! வெளிச்சத்திற்கு வந்த மகளிர் உரிமைத்தொகையின் குளறுபடி.! - Seithipunal
Seithipunal


கால் இல்லாத இளம்பெண்ணிடம் கார்.! வெளிச்சத்திற்கு வந்த மகளிர் உரிமைத்தொகையின் குளறுபடி.!

சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படை காவல் குடியிருப்பு பகுதியில் உறவினர்களை பிரிந்து தனியாக வசித்து வருபவர் சுபாஜா. இரண்டு கால்களையும் இழந்த மாற்று திறனாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், ஆதரவு ஏதும் மில்லாமல், ஏழ்மை நிலையில் வசித்து வருகின்றார்.

இவர், சிவகங்கை வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து அங்கு வரும் பயனாளிகளுக்கு மனு எழுதிக் கொடுப்பதன் மூலம் அன்றாட தேவைக்கு வருமானம் ஈட்டி வருகிறார். இந்த நிலையில், சுபாஜா தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் பெறுவதற்காக மனு செய்துள்ளார். 

ஆனால், இவரது மனு ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்ததில், அவர் சொந்தமாக நான்கு சக்கர வாகனம் வைத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளியான தன்னிடம், கார் இருப்பதாக கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பது கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது நிலை குறித்தும், மகளிர் உரிமை தொகை வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

disabled person petition to sivankangai collector for woman rights scheme application reject


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->