பேரறிவாளனுடன் கர்ணன் பட இயக்குனர் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் சிறையிலிருந்து விடுதலையான நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் சந்தித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை வழக்கில் வெளியான தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து மேலும் இது குறித்து தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தனது விடுதலைக்கு ஆதரவாக இருந்தவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் பேரறிவாளனை இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடனிருந்தார்.

முன்னதாக பேரறிவாளன் விடுதலைக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Mari Selvaraj meet perarivalan


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->