கூகுள் பே பணப்பரிமாற்றம்: ரூ.55000 மோசடி.!  இதை செய்திடாதீங்க.. உங்களுக்கும் இது நடக்கலாம்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்த சுப்புராம் என்பவருடைய மகன் பிரகாஷ் யாதவ். மகாராஷ்டிராவில் இருக்கும் ஒருவருக்கு செல்போன் மூலமாக 16,000 கூகுளே மூலம் பணம் அனுப்பி இருக்கின்றார். ஆனால், வெறும் 6 ஆயிரம் மட்டுமே அவருக்கு சென்றுள்ளது. மீதி பத்தாயிரம் போய் சேரவில்லை. 

எனவே கூகுள் பிளே கஸ்டமர் எண்ணுக்கு கால் செய்த பிரகாஷ் அது குறித்து கேள்வி எழுப்ப வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பப்பட்டது. வங்கியின் முழு விவரம் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். மீதி 10 ஆயிரம் திருப்பி அனுப்பி விடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர். 

கூகுள் நிறுவனத்தை சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டு பேசிய ஒருவர் உங்கள் வங்கி கணக்கில் இருந்து 6 ஆயிரம் மட்டுமே அனுப்ப முடிந்தது. 10,000 அனுப்ப முடியவில்லை. அந்த பத்தாயிரத்தை மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்புகிறோம். ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு, பின் நம்பர், வங்கி கணக்கு எண் ஆகியவற்றின் முழு விவரம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி அனைத்து விபரங்களையும் கொடுத்த பொழுது அவர்களது வங்கி கணக்கில் இருந்து மூன்று முறை 55 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரகாஷ் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

கூகுள் பே மூலமாக பணத்தை ஏமாற்றிய நபரை விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கூகுள் மூலமாக பண பரிமாற்றம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindivanam men cheated by unknown using google pay 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->