திண்டுக்கல்: கணவனுக்கு துரோகம்.. கட்டிலுக்கு அடியில் உண்மை.. உண்மை தெரிந்ததால் மனைவி விபரீதம்.! - Seithipunal
Seithipunal


வேடசந்தூரில் நள்ளிரவு நேரத்தில் கள்ளக்காதலனை கட்டில் அடியில் மறைத்து வைத்திருந்த மனைவி, கணவன் பார்த்து அதிர்ச்சியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு திருமணம் முடிந்து நாகலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வேல்முருகன் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், வேல்முருகனின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கம் அவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கள்ளக்காதல் ஜோடி இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக முடிந்து நள்ளிரவு நேரத்தில் வேல்முருகன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

இதன்போது, பலமுறை கதவை தட்டியும் திறக்காத நாகலட்சுமி, தாமதமாக வந்து கதவை திறந்துள்ளார். உள்ளே சென்று தனது ஆடைகளை மாற்றும்போது, கட்டிலுக்கு அடியில் ரமேஷ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இது தொடர்பாக உடனடியாக புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு விரைந்து சென்ற நிலையில், காலையில் வந்து புகார் அளிக்குமாறு காவல்துறையினர் வேல்முருகனை திரும்பி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு திரும்பி வரும்போது நாகலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். 

மனைவியின் உடலை கட்டியணைத்து வேல்முருகன் கதறியழவே, விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் விஷயத்தை புரிந்துகொண்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், நாகலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வேடசந்தூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Vedasandur Nagalatsumi Suicide due to his Husband Known about Affair Truths


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal