#தமிழகம் || 1.29 இலட்சம் ரூபாய்க்கு செல்போன் வாங்க முயன்ற கொள்ளையன்., உட்காந்த இடத்திலேயே சோலியை முடித்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் அருகே ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளரின் வங்கிக் கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில், ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வேடப்பட்டி பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் நடராஜன் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து, கொள்ளையர்களின் வங்கிக் கணக்கை உடனடியாக கண்டுபிடித்தனர்.

மேலும், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு லட்சத்து இருபத்தி ஒன்பது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு மொபைல் போனை ஆன் லைன் மூலம் ஆர்டர் செய்து உள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, மொபைல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போலீசார் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கொள்ளைபோன இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தொகையில்,  ஒரு லட்சத்து இருபத்தி ஒன்பது ஆயிரம் ரூபாயை மீட்டு நடராஜனிடம் போலீசார் வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindigul vedapatti nadarajan money robbery case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->