கணவன் விபத்தில் பலியாக, மனமுடைந்த மனைவி விபரீத முடிவு.. கண்ணீரில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பெரும்புள்ளி பகுதியை சார்ந்தவர் மருதராஜ். இவரது மனைவி உமாராணி (வயது 29). இவர் வடமதுரையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். 

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடந்த சாலை விபத்தில் மருதராஜ் உயிரிழந்து இருக்கிறார். இவரது மறைவு உமாராணியை மிகவும் வாட்டியுள்ளது. 

இதனால் மனமுடைந்த நிலையிலேயே காணப்பட்ட உமாராணி, கடந்த 27 ஆம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உமாராணி, சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த வடமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் விசாரணை செய்து வருகிறார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Vadamadurai woman suicide due to feeling sad about Husband Died in Accident


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal