கள்ளத்தனமாக மது விற்பனை முயற்சி.. தட்டிக்கேட்ட தலைமை காவலரை தாக்கிய சமூக விரோதிகள்.! - Seithipunal
Seithipunal


பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், நேற்று மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில், அனைத்து மதுபானக் கடைகளிலும் மது பிரியர்கள் முண்டியடித்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். 

இந்த சமயத்தில், கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்ய, மதுபானங்களை மொத்தமாக பெற்று செல்வதாகமதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கரூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள மதுபான கடையின் 3225 சென்ற அதிகாரி சோதனையில் ஈடுபட்டனர். 

இதன் போது, சிலர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கியுள்ளனர். இதனையடுத்து தலைமை காவலர் மாரிமுத்து, எதற்காக பெட்டி பெட்டியாக மதுபானம் வாங்குகிறீர்கள்? என்று விசாரிக்கவே, அந்த கும்பல், " நாங்கள் அப்படித்தான் வாங்குவோம்.. அதைக் கேட்க நீ யார்? " என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதனையடுத்து தான் காவல் அதிகாரி என்று கூறவே, அந்த கும்பல் மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த மாரிமுத்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக மதுபானக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த காவல்துறையினர், காட்சிகளின் அடிப்படையில் வேடசந்தூரை சார்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள பிறரையும் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Police Officer attacked By Strangers 15 Jan 20201


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->