பிரதமர் மோடிக்கு புகழாரம்! தேர்தலில் போட்டியிடும் சசிகலா, திசைமாறும் தினகரன் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன், அந்த முயற்சி வெற்றி அடைந்தால் அவர் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் கூறியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அமமுக நிர்வாகி ஒருவரின் இல்ல மனவிழாவில் கலந்துகொண்ட அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டிற்கு சிறப்பான திட்டங்களை பிரதமர் மோடி  செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்துக்கு வருகை புரிவதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை. அதிமுகவினர் பேச்சுக்கு எல்லாம் நான் பதில் கொடுக்கனும் என்ற கட்டாயமில்லை. என் மீது குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது. அதற்கெல்லாம் நான் கருத்து சொல்ல முடியாது. 

எங்களது இலக்கு என்பது அம்மாவுடைய ஆட்சியைக் கொண்டு வந்து மக்களுக்குச் சேவை செய்வதுதான். அம்மாவின் தொண்டர்கள் இருப்பதுதான் அமமுகவில்தான். இந்த இயக்கம் மட்டும்தான் முதல் அணி, மூன்றாவது, நான்காவது அணி என்பது எல்லாம் இல்லை.

ஊற்றிக் கொடுப்பது எந்த ஊரில் குலத் தொழில்? உளறுவதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. கொள்ளையர்கள் அடுத்தவர்களைக் கொள்ளையர்கள் என்று கூறுவது போல, ஊற்றிக் கொடுப்பவர்கள் அடுத்தவர்களை ஊற்றிக் கொடுப்பவர் என்றுதான் சொல்வார்கள். இனிமேல் நான் அடிமையாக இருக்க மாட்டேன் எனக் கூறுவதன் மூலம் அவர்கள் ஏற்கெனவே அடிமையாக இருந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புகொள்கிரார்கள். அவர்களே சேற்றில் கல்லைப் போட்டு அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள்.

ஸ்லீப்பர் செல் என்பவர்கள் எங்கள் நலம் விரும்பிகள், ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்புவர்கள், அவர்கள் வரவேண்டிய  நேரத்தில் வருவார்கள் அப்போது நிச்சயம் அதிமுக என்ற இயக்கத்தை மீட்டெடுப்போம். தமிழ்நாட்டு மக்கள் அதற்கான வாய்ப்பை எங்களுக்குத் தருவார்கள் என தெரிவித்துள்ளார். 

சசிகலா உறவினர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப்படுவது குறித்த கேள்விக்கு, அது சுதாகரன் சொத்தோ, இளவரசி சொத்தோ கிடையாது. அது கம்பெனி சொத்து. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கிறது எனவும் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியாக சில முயற்சிகளை செய்து வருவதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன், அந்த முயற்சி வெற்றி அடைந்தால் அவர் தேர்தலில் போட்டியிடுவார்,  சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhinakaran press meet in tanjore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal