6500 கன அடியாக குறைந்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக, கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கபினி அணைக்கும், கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும்  நீர்வரத்து அதிகரித்து வந்தது.

மேலும், பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளிலிருந்து தமிழக காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை நீர்வரத்து 15000 கனஅடி வந்தது.மேலும், கர்நாடக அணைகளின் நீர்திறப்பு முற்றிலும் குறைக்கப்பட்டது.

இதனால், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,500 கனஅடியாக குறைந்து வந்தது.இதையொட்டி சினிபால்ஸ்,மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வந்தது.

கூடுதலாக சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து வருகின்றனர். அதன் பிறகு, அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuri Hogenakkal water flow reduced to 6500 cubic feet


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->