கார்த்திகை மாத மகாதீபம்; திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு; பக்தர்கள் மலையேற தடை..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நிகழ்வு இன்று மாலை 06 மணிக்கு ஏற்றப்படுகிறது. சுமார் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் இந்த தீபத்திற்கு முன்னதாக அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படவுள்ளது.

மகா தீபத்திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால், நகரம் முழுவதும் விழாக்கோலமாக பூண்டுள்ளது. அதிகாலை 04 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மாலை 06 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அப்போது ஆண்டுக்கு ஒருமுறை சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி 3ம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் இட வசதிக்கு ஏற்றவாறு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மகாதீபம் ஏற்றுவதற்காக, 4,500 கிலோவில் முதல் தர தூய நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு, கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1,500 மீட்டர் துணி திரி, உபயதாரர்கள் மூலம் நேற்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தீபத்திருவிழாவை தரிசிக்க இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில், 05 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 5,484 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காட்பாடி வழியாகவும், பல்வேறு வழித்தடங்களிலும் திருவண்ணாமலைக்கு 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை நகரை இணைக்கும் பிரதான சாலைகளில் 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 05-ஆம் தேதி வரை தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதோடு, 12 ஆயிரம் கார் மற்றும் வேன்கள் நிறுத்த வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு நடவடிக்கைக்காக 60 சிறப்பு கமாண்டோ படை வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்களுடன் 640 தீயணைப்பு வீரர்கள், 180 வனத்துறையினர் அவசரகால மீட்புப்பணிக்காக ஈடுபடுத்தப்படுகின்றனர். 67 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 74 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயில், மாட வீதிகள், நகரின் முக்கிய வீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் அதி நவீன சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்பட 1024 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதன்முறையாக தீபத்திருவிழா கண்காணிப்பு பணியில், செயற்கை நுண்ணறிவு(ஏஐ) கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம், கூட்ட நெரிசலை எளிதில் கண்டறியவும், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டங்களை மிக துல்லியமாக அடையாளம் காணவும், பிரதான சாலைகளில் வாகன பதிவு எண்களையும் துல்லியமாக பதிவு செய்யவும் முடியும். அதேபோல், கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்கள் குறித்த தகவல்களை கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கும் வசதியும் உள்ளன. 

மேலும் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் திருவண்ணாமலையில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த ஆண்டும் மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தீபத்திருவிழாவின்போது, மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devotees banned from climbing mountains during the Karthigai Mahadeepam festival in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->