தமிழகத்தில் டெங்குவால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு, 3 பேர் உயிரிழப்பு.!
dengue fever in tamilnadu
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் 3 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், தற்போது வரை 3 பேர் டெங்குவால் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின், சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் சென்று நலம் விசாரித்து, அவர்களது குறைகளை கேட்டார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் 132 பேர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 8 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் 100 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
English Summary
dengue fever in tamilnadu