காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மனு ஒன்றுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், இதற்கு முன்பாக திருச்சியில் தொடரப்பட்டு நிலுவையில் இருந்த அந்த வழக்கு நேற்று திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த வழக்கிற்காக அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார். 

அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். 

இதற்கிடையே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defamation suit on evks elangovan case canceled


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->