கடன் தகராறு கொடூரம்...! தொழில் அதிபரை காரில் கடத்தி தாக்கிய இருவர் கைது...!
debt dispute brutal Two arrested kidnapping and attacking business tycoon car
வளசரவாக்கம், எம்.ஜி. சக்கரபாணி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்பவர், ஒன்றரை ஆண்டுகளாக ரெடிமேடு காம்பவுண்டு சுவர் தயாரிப்பு தொழிலை மேற்கொண்டு வருகிறார். தொழில் வளர்ச்சிக்காக கடந்த ஜனவரி மாதம் நெற்குன்றத்தைச் சேர்ந்த பாலாஜி (32) என்பவரிடம் ரூ.2.10 லட்சம் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வரை பல்வேறு தவணைகளாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை அவர் திருப்பிச் செலுத்தியுள்ளார். இருப்பினும் மீதமுள்ள தொகை வழங்கப்படாத நிலையில், கடந்த 11-ஆம் தேதி பாலாஜி தனது நண்பருடன் சுரேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, இரும்புக் கம்பியால் சுரேஷ்குமாரை தாக்கியதுடன், அவரை காரில் கடத்தி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. பயணத்தின் போதும் தொடர்ந்து தாக்கி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் சுரேஷ்குமார் தனது பழைய முதலாளியான விஜயகுமார் என்பவரிடம் இருந்து ஜிபே மூலம் ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டு பாலாஜிக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின் மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என எச்சரித்து, பின்னர் அவரை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த சுரேஷ்குமார் மருத்துவ சிகிச்சைக்கு பின் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், காரில் கடத்தி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பாலாஜி மற்றும் அவரது கூட்டாளியான சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த நரசிம்மன் (31) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
debt dispute brutal Two arrested kidnapping and attacking business tycoon car