மணமேடைக்கு முன் மரண மேடை...! உசிலம்பட்டியில் நெஞ்சை உலுக்கும் விபத்து...!
death scene instead wedding stage heart wrenching accident Usilampatti
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் பிரசன்ன வெங்கடேஷ் (26). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், வரும் 28-ஆம் தேதி திருமண வாழ்வில் காலடி எடுக்க இருந்தார்.
மகிழ்ச்சியின் உச்சத்தில், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் திருமண அழைப்பிதழ்களை வழங்கி வந்த இளைஞனின் கனவுகள், ஒரே கணத்தில் சோகமாக மாறியது.

நேற்று முன்தினம் இரவு, உசிலம்பட்டி பகுதியில் அழைப்பிதழ்களை வழங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பேரையூர் சாலையில் எதிரே வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த கொடூர விபத்தில் பிரசன்ன வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சில நாட்களில் திருமண மேடை ஏறவிருந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம், குடும்பத்தாரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகிழ்ச்சியால் அலங்கரிக்க வேண்டிய வீடு, இன்று கண்ணீரால் நனைந்து, அந்த பகுதி முழுவதும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.
English Summary
death scene instead wedding stage heart wrenching accident Usilampatti