கோவையில் துணிகர கொள்ளை...! பூட்டிய வீட்டை உடைத்து ரூ.1½ கோடி மதிப்பிலான 75 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை...! - Seithipunal
Seithipunal


கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில் ஒரு மாதமாக பூட்டிக் கிடந்த ஓய்வுபெற்ற ஆடிட்டரின் வீட்டின் பூட்டை உடைத்து, சுமார் 75 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் அள்ளிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பணக்காரவீதி பகுதியில் வசித்து வருபவர் சேஷகிரி (வயது 70). தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், பெங்களூருவில் வசித்து வரும் தனது மகனை சந்திப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த அவர், நேற்று காலை கோவையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.

வீட்டின் முன்பக்க கதவை பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனால் பதற்றமடைந்த சேஷகிரி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெள்ளிப் பொருட்கள் காணாமல் போயிருந்தன.வெள்ளியால் செய்யப்பட்ட பூஜைப் பொருட்கள், தட்டுகள், குத்துவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம நபர்கள் மூட்டையாக அள்ளிச் சென்றது தெரியவந்தது. மொத்தம் சுமார் 75 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சேஷகிரி அளித்த புகாரின் பேரில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரு மாதமாக வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1½ கோடி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் ஒப்பணக்காரவீதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

daring robbery Coimbatore locked house broken and 75 kg of silver jewelry worth 1 and half crore stolen


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->