''லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார்''; அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..! - Seithipunal
Seithipunal


''மக்கள் வரிப்பணத்தில் நாங்கள் ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம், தொட்டாலும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்'' எனவும், ''லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார்.'' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் இது குறித்து கூறியதாவது;

எங்கள் முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித்துக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர் ஆசைபட்டது போல விளையாட்டுத் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க விவகாரங்கள் குறித்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ரீல்ஸ்கள் அதிகம் வருகிறது. இது மக்கள் அரசியல்மயப்படுவதற்கான அறிகுறி என்று சுட்டிக்காட்டியுள்ளார். சினிமா வசனங்களையும், நகைச்சுவை துணுக்குகளையும் பேசிக் கொண்டிருந்த வீடுகளில் இன்று சட்டப்பேரவை நிகழ்வுகள் பேசப்படுகிறது என்றும், சட்டப்பேரவை நேரலை மூலமாக ஒரு தலைமுறையையே முதல்வர் விஜய் மாற்றிக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார் என்றும்,  கே.என்.நேரு மூத்த அரசியல்வாதி. நாங்கள் ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம், தொட்டாலும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம். என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Interview with Minister Rajmohan regarding the raid on KN Nehru house


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->