கே.என்.நேருவின் சகோதரரின் கோவை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை..! - Seithipunal
Seithipunal


கோவையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவி்ன் சகோதரர் அலுவலகம், ஓய்வு பெற்ற பெண் அதிகாரியின் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.

அதேப்போன்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவர் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை போன்ற இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.

முந்தைய திமுக ஆட்சியில் பணி நியமனங்கள், பணியிட மாறுதல்கள், ஒப்பந்தங்கள் வழங்குதல் உள்ளிட்டவற்றில் விதிமீறல்கள், லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய கோவையில் உள்ள இரு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.

அதாவது, கோவையில் உள்ள திருச்சி சாலையில், சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழித்தடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்தக் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் உள்ளது.

நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் குழுவினர் ,லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் குழுவினர் இன்று காலை 08.30 மணியளவில் மணிவண்ணனின் அலுவலகத்துக்கு சென்று, தங்களது சோதனையை தொடங்கினர். அப்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், வெளியாட்கள் யாரும் அலுவலகத்துக்குள் வரவும் அனுமதிக்கப்படவில்லை.

அத்துடன், சுங்கம் அருகேயுள்ள சிவராம் நகரில் உள்ள ஓய்வு பெற்ற மாநகராட்சி பெண் அதிகாரி ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது. இவர், கோவை மாநகராட்சியில் பொறியியல் பிரிவு, நகரமைப்புப் பிரிவு உள்ளிட்டவற்றிலும்,ஏனைய பல்வேறு மாநகராட்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.

இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சோதனை நடத்தினர். இங்கு சென்னை போலீஸ் குழுவினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், கோவையில் மேலும் இரு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த இடங்கள் எது என்று உறுதியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anti Corruption Bureau police raid KN Nehru brothers Coimbatore office


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->