பா.ஜ.க. சிறுபான்மை நலபிரிவு தேசிய செயலாளர் கைது! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பா.ஜ.க சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் உள்பட 15 பேரை அனுமதி இன்றி கொடியேற்ற வந்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் வீட்டிற்கு அருகில் இருந்த கட்சி கொடி அகற்றப்பட்டதை கண்டித்து பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களை போலீசார் கைது செய்த நிலையில் இன்று 100 பா.ஜனதா கொடி கம்பங்கள் ஏற்றப்படும் என பா. ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். 

அதன்படி கடலூர், விருத்தாச்சலம் அருகே உள்ள பகுதியில் இன்று கட்சி கொடியேற்றம் நடைபெற்று கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இதில் கட்சி கொடியேற்றுவதற்காக பா. ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வந்திருந்தார்.

 

ஆனால் கட்சி கொடி கம்பம் மற்றும் கொடி ஏற்ற அனுமதி வாங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் போலீசார் கொடி ஏற்றுவதை தடுத்து நிறுத்தியதால் இரு பிறவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது. 

இதனை அடுத்து போலீசார் பா. ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் உட்பட 15 பேரை கைது செய்து அருகில் இருந்த ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பகுதியில் பரபரப்பு நிலவுவதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cudddalore bjp members arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->