கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்.. கடலூர் - ஓசூர் பேருந்து பயணத்தில் திகில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சாலையில் சென்ற அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய நிலையில், அதிஷ்டவசமாக பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு அரசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து, கடலூர் மாவட்டம் குமாரமங்கலம் அருகே செல்கையில், பேருந்தின் பின்பக்க சக்கரம் கழன்று ஓடியுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி விலகி செல்லவே, பேருந்தின் ஓட்டுனரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளனர். பேருந்தும் மிதமான வேகத்தில் பயணம் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இதனையடுத்து, பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். ஓடிச்சென்ற சக்கரத்தை பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் எடுத்து வந்து பொருத்தி பேருந்தை இயக்கினார். இதனால் கடலூரில் இருந்து ஓசூர் செல்லும் பேருந்தில் ஏறிய பயணிகள், தாமதமாக ஓசூர் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore to Hosur Bus Tier Separated Form Bus Luckily No Major and Mine Accidents


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->