பிறந்து சிலமணிநேரம் ஆகிய குழந்தையை கவ்விக்கொண்டு வந்த நாய்கள்.. திட்டக்குடியில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருந்ததியர் காலனி பகுதியில், நேற்று காலை 11 மணியளவில் தெருநாயொன்று பச்சிளம் ஆண் குழந்தையை வாயில் கவ்வியவாறு ஓடி வந்துள்ளது. இதன் பின்னாலேயே 3 தெருநாய்கள் வந்த நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், நாயிடம் இருந்து குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். 

ஆனால், நாய்கள் குழந்தையை விடாமல் இருந்ததால், கற்களை எடுத்து நாயை விரட்டியடித்து குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தையை பொதுமக்கள் பார்க்கையில், பிறந்து சிலமணிநேரம் ஆகிய பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும், குழந்தையை கையையும் நாய்கள் கடித்து குதறியுள்ளது.

பின்னர் இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த திட்டக்குடி காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், " திட்டக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு சர்வ சாதாரணமாக நடந்து வருவதாகவும், இது தொடர்பாக அறிந்த பல அரசு அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவ்வாறாக இறந்த பல குழந்தைகளின் சடலம் வெள்ளாற்றில் புதைக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Tittakudi New Born Child death due to dogs byte police Investigation


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal