போதையில் பெண்களிடம் வம்பு.. பொறுப்புள்ள தாயாக கண்டிப்பு.. கேட்காததால் எடுக்கப்பட்ட இரும்பு ராடு.! - Seithipunal
Seithipunal


36 வயதாகியும் திருமணம் ஆகாத ஏக்கத்தில், பெண்களிடம் போதையில் செய்யும் வம்பு மகனை பெற்ற தாயே நடுத்தெருவில் கொடூர கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி குப்பாயி. இவருக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ள நிலையில், மூத்த மகன் பாக்யராஜ் திருமணம் முடிந்து திருப்பூரில் வசித்து வரும் நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக குப்பாயியின் மகள் இயற்கையை எய்தியுள்ளார். 

இரண்டாவது மகன் பாஸ்கருக்கு 36 வயதாகும் நிலையில், திருமணம் செய்யாமல் இருந்துள்ளார். மேலும், மது போதையில் தெருவில் செல்லும் பெண்களிடம் வம்பிழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் தங்களது குடும்ப கௌரவம் பாதிப்பதாக கருதிய நிலையில், குடும்பத்தினர் பலமுறை பாஸ்கரை கண்டித்தும் பேச்சை கேட்காமல் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த பாஸ்கர், தனது தாய் மற்றும் தம்பி பிரபாகரன் ஆகியோருடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குப்பாயி, தனது மகன் பிரபாகரனின் உதவியுடன் பாஸ்கரை கயிற்றால் கட்டிப் போட்டு, மிதித்து அங்கிருந்த இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். 

பின்னர், பாஸ்கரை வீட்டிற்குள் தரதரவென இழுத்துச் சென்று, மறுநாள் காலை பாஸ்கரன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக கூறி இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து குப்பாயியும், பிரபாகரனும் அழுது புலம்பியுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாஸ்கரின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையில், ஆத்திரத்தில் கொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயையும், மகனையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Srimushnam man Murder by Mother and Brother due to Torture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal