கடலூர் | மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்!
Cuddalore handicapped protest front collectors office
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றதால் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நல சங்கம் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் முன்னணியில் மாற்றுத்திறனாளிகள் திரண்டு இருந்தனர்.
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் வாங்கும் நிலம், மனை போன்றவற்றிற்கு பத்திரப்பதிவு இலவசமாக செய்ய வேண்டும்.
நல அலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியத்தை 50,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். மாற்று திறனாளிகள் வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கும் போது ஜாமீன் இல்லாமல் கடன் வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
Cuddalore handicapped protest front collectors office