600 கோடி அரசு பணம்! இந்து, இஸ்லாமியர்களுக்கு ஆசிரியர் பணி தரமாட்டிங்களா? சிஎஸ்ஐ கல்வி நிறுவன வழக்கில் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில், மத அடிப்படையில் பணி நியமனங்களை செய்யக்கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பரப்பி உள்ளது. 

நெல்லை சிஎஸ்ஐ (கிறிஸ்துவ மத பிரிவு) திருமண்டல பொருளாளர் மனோகர் தங்கராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். 

அதில், தென்காசி மாவட்டத்தில் சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு பதிவு காலம் முடிந்த நிலையில், பேராயர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி வருகிறார். இதற்கு தடை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் உண்மையை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, பேராயர் தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவின் விவரம் பின்வருமாறு: சிஎஸ்ஐ திருமண்டலத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவன ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் சம்பளத்துக்காக ஆண்டுதோறும் ரூ.600 கோடியை அரசிடம் இருந்து நெல்லை-தென்காசி திருமண்டல நிர்வாகம் பெறுகிறது. 

மேலும், சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு அரசு கொடுத்த சில உரிமைகளை தவறாக பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக சிஎஸ்ஐ மறை மாவட்ட கல்வி நிறுவனங்கள் ஒன்றில் இந்து, இஸ்லாமிய ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்களா? 

மற்ற பள்ளிகளில் ஆசிரியர்கள் தேர்வு நடைமுறைகளை ஏன் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்ற கேள்வி எழுகிறது. 

ஜாதி, மதம் இல்லாமல் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் காலிப்பணியிடங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். நேர்காணல் நடவடிக்கைகள் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாளர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவதற்கான சட்டம் இயற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSI Education Govt Aided Chennai HC Order


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->