பள்ளிக்குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...! கடலூரில் யு.கே.ஜி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை...! பொதுமக்கள் கொதிப்பு...! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் மழலை மாணவியைச் சுற்றிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யு.கே.ஜி. படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வெளியான தகவல் பெற்றோர்களையும் பொதுமக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியில் கல்வி பயிலும் 5 வயது யு.கே.ஜி. மாணவிக்கு, பள்ளியுடன் தொடர்புடைய ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலை பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர்களுடன், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் நேற்று காலை பள்ளி வளாகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர்.

மேலும் ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.இதுகுறித்து தகவலறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பள்ளி வளாகத்தில் கூடியிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் காவலர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு, மேல்சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனைக்காக அண்ணாமலைநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பள்ளியைச் சேர்ந்த ஒருவரிடம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cruelty that befell schoolchild harassment UKG student Cuddalore Public outrage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->