இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் நிதி முறைகேடு.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!  - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோன அதிகாரிகள் மீது குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும், 'இண்டிக் கலெக்டிவ்' என்ற அமைப்பும் மற்றும் ஆர்.ரமேஷ் என்பவரும் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில் அறங்காவலர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே நிதி ஒதுக்குவது பற்றி அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்று, சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், உடனே நிதி ஒதுக்கும் படி ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு? அதில் எவ்வளவு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன? அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை எவ்வாறு மீட்க்க போகிறீர்கள்? நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு கடந்த வருடம் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முந்தைய உத்தரவின் படி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதி அறிக்கை தயாராகி வருகிறது என்றும், தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு, அமல்படுத்தப்பட்டது. இது குறித்த அறிக்கையை செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court judgement about hindu temples issues 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->