தொழிலில் நஷ்டம்.. பங்குசந்தை முதலீட்டாளர் மனைவியுடன் எடுத்த விபரீத முடிவு..!
Couple Committed Suicide Near Madurai
பங்குசந்தை நஷ்டத்தால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் பழைய குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு திருமணமாகி லாவண்யா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அவர் பங்கு சந்தை முதலீட்டாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பங்கு பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், நாகராஜன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் அருகில் உள்ள சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் தற்கொலை செய்திருந்தனர்.
அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Couple Committed Suicide Near Madurai