மும்பை, டெல்லியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சென்னை.. ஆய்வில் வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா உயிரிழப்புகளை தவிர்க்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. 

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி என 5 மாநகராட்சியில் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையை அதிகமாக செலுத்தி கொண்டவர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் 11 சதவீத பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் 10 சதவீதம் பேரும், டெல்லி, மும்பையில் தலா 7 சதவீதம் பேரும், ஐதராபாத்தில் 5 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 40 வயது உள்ளவர்களுக்கு அதிகமாக பெங்களூரில் 64% பேருக்கும், சென்னையில் 43 % பேருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona vaccinated 2 dose chennai first place


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal