கொரோனா பாட்டியின் அதிர்ச்சி செயல்.. அதிர்ந்துபோன ஆட்டோ ஓட்டுநர்.. விழிபிதுங்கிய காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் பகுதியைச் சார்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு நாள் சிகிச்சையில் இருந்த கஸ்தூரி திடீரென மாயமாகியுள்ளார். இதன் பின்னர் அவர் எங்கு சென்றார்?, என்பது தெரியாமல் விழிபிதுங்கி மருத்துவமனை நிர்வாகம், இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து காவல்துறையினர் இது தொடர்பான வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கஸ்தூரி பாட்டி தனது மகளுக்கு தொடர்பு கொண்டு ஆட்டோவில் சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், கஸ்தூரி பாட்டியின் மகள் நெய்வேலியில் இருக்கும் தகவலறிந்த காவல்துறையினர், அவரை தொடர்புகொண்டு கஸ்தூரி பாட்டிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றும், அவர் உங்களுக்கு தொடர்பு கொண்டால் எங்களுக்கு கூறுங்கள் என்றும் கூறியுள்ளனர். 

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கஸ்தூரியின் மகள், தனது தாய் ஆட்டோவில் நெய்வேலிக்கு வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் மூலமாக பாட்டி தொடர்பு கொண்டது தெரியவந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அலைபேசி எண்ணை காவல் துறையினர் பெற்று விஷயத்தை தெரிவித்துள்ளனர். 

ஆட்டோ ஓட்டுநரின் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட காவல்துறையினர், மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்றும், அவரை உடனடியாக சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வருமாறும் கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகி, பின்னர் மூதாட்டியை எம்.ஜி.ஆர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.  

இதையடுத்து காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்துவிட்டு, ஆட்டோ ஓட்டுனர் அங்கிருந்து செல்ல முயன்ற நிலையில், காவல்துறையினர் அதே ஆட்டோவில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுனரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். மூதாட்டி முதலில் பல சாக்குகள் சொல்லி அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த நிலையில், காவல்துறையினர் பேசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona positive old lady try to escape home


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal