இன்று ஒரே மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா! 34 ஆவது மாவட்டமாக பட்டியலில் இணைந்த மாவட்டம்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனவினால்  இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 48 என உறுதி செய்யப்பட்டுள்ளது. பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதி செய்துள்ளார். இன்று உறுதியான 48 பேரில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேருக்கும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஐந்து பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நான்கு பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று புதியதாக இந்தப் பட்டியலில் தென்காசி மாவட்டத்தில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த பட்டியலில் இணையாத மாவட்டங்களாக மயிலாடுதுறை புதுக்கோட்டை தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. 

ஒட்டுமொத்தமாக இதுவரை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், சென்னை மாவட்டத்தில் 156 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 60 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 46 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 40  பேருக்கும், தேனி மாவட்டத்தில் 39 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 36 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 32 பேருக்கும்,  நாமக்கல் மாவட்டத்தில் 33 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 பேருக்கும், செங்கல்பட்டு மதுரை மாவட்டங்களில் தலா 24 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 23 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 22 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 17 பேருக்கும், கடலூர் சேலம் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 13 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 12 பேருக்கும், விருதுநகர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 பேருக்கும், கன்னியாகுமரி காஞ்சிபுரம் வேலூர் மாவட்டத்தில் தலா ஆறு பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 5 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் நான்கு பேருக்கும், தென்காசி கள்ளக்குறிச்சி ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கும், அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு என மொத்தமாக 738 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona district wise update on apr 08


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal