புதுச்சேரி குறித்து சர்ச்சை பேச்சு..அமைச்சர் சேகர்பாபுவுக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி பற்றி தரக் குறைவாக பேசிய தமிழக அமைச்சர் சேகர்பாபுவுக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது..

இன்று 21-05-2025 புதன்கிழமை மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது.சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தொடங்கப்பட்ட அன்னதானத் திட்ட விழாவின் நிறைவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கஎழுப்பியுள்ளனர்.  அப்போது ஒரு பத்திரிகையாளர் சாலைகள் முறையாக இல்லை என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளாரே எனக் கேட்டதற்கு பாண்டிச்சேரியில் கவர்னராக இருந்தபோது தள்ளாடிக் கொண்டிருப்பவர்களை பார்த்து வந்தவர். அதனால் அவருக்கு எல்லாமே தள்ளாட்டமாக தெரிகிறது எனப் பேசி உள்ளார்.

பாரதி,பாரதிதாசன், அரவிந்தர் என பல்வேறு ஆளுமைகள் போற்றிப் புகழ்ந்த புதுச்சேரி மண்ணை குடியின் அடையாளமாக இகழும் துணிச்சல் சேகர்பாவுக்கு எங்கிருந்து வந்தது. 1949 இல் புதுச்சேரி திராவிட கழக மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களை குண்டர்களை ஏவி அடித்து துவம்சம் செய்தது தி.மு.க.வின் இன்றைய கூடா நட்பு காங்கிரஸ் கட்சி. அப்போது கலைஞரை காப்பாற்றி இஸ்லாமியர் போல் வேடமிட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது பாண்டிச்சேரி தான். தமிழ்நாட்டில் திமுக என்ற கட்சி "தள்ளாட்டம்" போட்ட போதும், பலமுறை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியதும் இதே பாண்டிச்சேரி தான். இத்தகைய புதுச்சேரியை குடிகார பூமியாக சித்தரிக்கும் சேகர் பாபு கொஞ்சம் தன் முதுகை பார்க்க வேண்டும்.

கடந்த 2024 - 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.48,,344 கோடி என தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களின் உடல் நலம் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் மது வருவாய் ஒன்றையே மூலதனமாகக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அமைச்சர் புதுச்சேரியை பற்றி பேசலாமா? அதிலும் குறிப்பாக தமிழக மக்களை "தள்ளாட்டத்திலேயே" வைத்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் என டார்கெட் வைத்து மக்களை சுரண்டிக் கொழுத்து அமலாக்கத்துறையின் ஆயிரம் கோடி மது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தி.மு.க.வின் அமைச்சர் புதுச்சேரி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. 

எலைட் டிஸ்ட்டிலரீஸ், கோல்டன் வாட்ஸ், எஸ்.என்.ஜே டிஸ்டிலரீஸ்,  ஏ.எம். பிரிவேரியஸ், கல்ஸ் டிஸ்டிலரீஸ், எம்.பீ. டிஸ்டிலரீஸ் என பினாமிகள் பெயரில் திமுகவினர் நடத்தி வரும் மது ஆலைகளை மூடினாலே தமிழ்நாட்டின் "தள்ளாட்டம்" நிற்பதுடன், சட்டம் ஒழுங்கும் கட்டுக்குள் வரும். இவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிட்ட சேகர் பாபு புதுச்சேரி தள்ளாடிக் கொண்டிருப்பதாக கூறி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது வன்ம பேச்சுகளை இத்துடன் நிறுத்திக் கொள்வதுடன், தனது பேச்சுக்கு நிபந்தனைற்ற மன்னிப்பு கோர வேண்டுமென புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்துகிறது. இல்லையெனில் அமைச்சர் சேகர்பாபு புதுச்சேரிக்கு வரும்போது புதுச்சேரி மக்களால் "சிறந்த முறையில்" வரவேற்பு அளிக்கப்படும் என இதன் மூலம் எச்சரித்துக் கொள்கிறோம் என மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversial discussions about Puducherry The People’s Rights Movement condemns Minister Saikarpabhu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->