ஒப்பந்த ஆசிரியர்கள் கொட்டும் மழையில் போராட்டம் - எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆதரவு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் பணி வழங்கக்கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் குடும்பத்துடன் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளர்கள், பயிற்சிபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பாலசேவிகா ஆசிரியர்கள் என நான்கு பிரிவுகளில் 288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

அவர்களை அப்போது நேரடி நியமனம் மூலம் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் என்பதால் ஆண்டுதோறும் அவர்கள் ஒப்பந்தத்தை நீட்டித்து அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுவை, காரைக்கால், மாஹே, யானம் உள்ளிட்ட  பகுதிகளில் வேலை செய்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த மாதம் கல்வித்துறையில் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்க பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. ஏற்கனவே பணியில் இருந்த இவர்களை பணி நிரந்தரம் செய்யாமலும் ஒப்பந்தத்தை நீட்டிக்காமலும் கல்வித்துறை இவர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் ஆசிரியர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்துடன் சட்டசபை அருகில் கொட்டும் மழையில் காத்திருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.

 இதனை அறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மாநில திமுக அமைப்பாளருமான திரு. இரா. சிவா அவர்கள் அவர்களை சாதித்து பணிநிரந்தரம் செய்யும் வரை தங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக உறுதி அளித்தார். அப்போது உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி உடனிருந்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Contract teachers protest in pouring rain Opposition leader R. Support Siva


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->