சுங்கச்சாவடி மீது மோதிய கண்டெய்னர் லாரி - ஊழியரின் நிலை என்ன?
conteinar lory accident in thiruvallur pattarai perumbuthur toll plaza
சென்னை- திருத்தணி இடையே உள்ள திருவள்ளூரை அடுத்த பட்டறை பெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி எப்போதும் பரபரப்பானதாக காணப்படும். இந்த நிலையில், இன்று மதியம் கண்டெய்னர் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி ஒன்று, கண்டெய்னர் இல்லாமல் சுங்கச் சாவடியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதன் படி இந்த லாரி சுங்கச்சாவடியில் Fastag பதிவிடுவதற்காக சற்று குறைவான வேகத்தில் வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, வசூல் செய்யும் நபர் இருக்கும் கூண்டு மீது பயங்கரமாக மோதியது. இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்ட ஊழியர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வெளியேறியுள்ளார்.
இதனால், அதிர்ஷ்டவமாக ஊழியர் உயிர் தப்பினார். இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த இந்த லாரி நின்று கொண்டிருந்த இன்னோவா கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சேதம் அடைந்தது. ஆனால், காரில் இருந்த 3 பேருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
conteinar lory accident in thiruvallur pattarai perumbuthur toll plaza