சரக்கு பாட்டிலில் அசுத்தம்...! 'காசு கொடுத்து வாங்கி உயிரை விடுவதா'...? - நாமக்கல் குடிகாரர்கள் ஆவேசம் - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் அத்தனூர் அருகே உள்ள மதுக்கடையில் வாங்கிய மதுப்பாட்டிலில் தூசி மற்றும் குப்பைகள் இருந்ததாக மதுபிரியர்கள் புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அத்தனூர் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடைக்கு நேற்று இரவு 2 பேர் மதுபானம் வாங்குவதற்காக சென்றுள்ளனர்.

அங்கு தலா ஒரு பாட்டில் என 2 மதுப்பாட்டில்களை ரூ.300 கொடுத்து வாங்கியுள்ளனர்.வீட்டுக்கு சென்ற அவர்கள் முதலில் ஒரு பாட்டிலில் இருந்த மதுவை குடித்துள்ளனர்.

பின்னர் மற்றொரு பாட்டிலை திறந்து குடிக்க முற்பட்டபோது, அதற்குள் தூசி மற்றும் குப்பைகள் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதையடுத்து அந்த பாட்டிலை அப்படியே எடுத்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மதுவின் தரம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுபிரியர்கள் கூறுகையில், "ரூ.300 கொடுத்து 2 மதுப்பாட்டில்களை வாங்கினோம். ஒரு பாட்டிலை குடித்துவிட்டோம். மற்றொரு பாட்டிலை குடிக்கச் சென்றபோதுதான் அதற்குள் தூசி மற்றும் குப்பைகள் இருப்பதை பார்த்தோம்.

காசு கொடுத்து வாங்கும் மதுவில் இதுபோன்ற அசுத்தங்கள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை குடித்துவிட்டு நாங்கள் செத்துப்போவதா? இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்" என்று ஆவேசமாக தெரிவித்தனர்.மதுப்பாட்டிலுக்குள் குப்பைகள் இருந்ததாக எழுந்துள்ள இந்த புகார், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Contamination cargo bottle Buy it for money and give up your life Namakkal drunkards furious


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->