கலைஞர் அறிவாலயம் கட்டுமான பணி..ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் நிதி உதவி! - Seithipunal
Seithipunal


கலைஞர் அறிவாலயம் கட்டுமான பணிக்கு புதுச்சேரி மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் திரு. தெய்வேந்திரன் அவர்கள் முதல் தவணையாக ரூ. 1,00,000/- நிதியினை மாநில கழக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு. இரா. சிவா அவர்களிடம் புதுச்சேரி மாநில திமுக தலைமை அலுவலகத்தில் வழங்கினார். 


புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்டுமான பணியை திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கடந்த 22.08.2025 அன்று திமுக–கழகத்தினர் முன்னிலையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பலர் கலைஞர் அறிவாலயம் கட்டுமான பணிக்கு நிதி அளித்து வருகின்றனர். 

அந்தவகையில் புதுச்சேரி மாநில ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் திரு. தெய்வேந்திரன் அவர்கள் முதல் தவணையாக ரூ. 1,00,000/- நிதியினை மாநில கழக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு. இரா. சிவா அவர்களிடம் புதுச்சேரி மாநில திமுக தலைமை அலுவலகத்தில் வழங்கினார். 
அப்போது பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன், தொண்டர் அணி அமைப்பாளர் வீரய்யன், கிளைக் கழக செயலாளர்கள் கருணாகரன், அகிலன், பிரகாஷ் தொகுதி நிர்வாகிகள் மோகன்ராஜ், ஸ்ரீதர், சுனித், குமரவேல், சக்திகுமார் தொகுதி மாணவரணி துணை அமைப்பாளர் தழிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Construction work of Kalaiyar Arivalayam Financial assistance from Deputy Organizer of Adi Dravidar Welfare Committee


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->