மேரி உழவர்கரையில் விரைவில் வாய்க்கால் கட்டும் பணி..குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடன் உறுதியளித்த பொதுப்பணித்துறை அதிகாரி!  - Seithipunal
Seithipunal


மேரி உழவர்கரை - ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரில் விரைவில் வாய்க்கால் கட்டும் பணி நடைபெறும் என்று பொதுப்பணித்துறை பாதாள சாக்கடை திட்டத்தின் அதிகாரி AE தெரிவித்துள்ளார்கள். 

புதுச்சேரி மாநிலம் மேரி உழவர்கரை - ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர், சிவசக்தி நகர்,சிவசக்தி நகர் விரிவு குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் இன்று   காலை பொதுப்பணித்துறை பாதாள சாக்கடை திட்டத்தின் அதிகாரி AE அவர்களை சந்தித்து எப்போது பூமி பூஜை நடத்திட உள்ளீர்கள் என்று கேட்கப்பட்டது.

 அதற்கு அதிகாரி அவர்கள் 1 கோடியே 90 லட்சங்கள் எஸ்டிமேட் போடப்பட்டு டெண்டர் விடுவதற்கு கோப்பு தாயரித்துள்ளோம் மே மாத இறுதிக்குள் டெண்டர் விடப்பட்டு ஜூன் மாதம்  10 தேதிக்கு மேல்  பூமி பூஜை  செய்து விரைவாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்கள் , 

அதன் பிறகு அம்மன் நகர் முதல் மேட்டுப்பாளையம் பாலம் வரை பெரிய வாய்க்கால் இடித்துவிட்டு தூர்வாரி அகலப்படுத்தி 7 அடி உயரத்திற்கு புதியதாக வாய்க்கால் கட்டும் பணி சம்பந்தமாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள EE (பிளானிங்) அவர்களை சந்தித்து  கேட்கப்பட்டது. அதிகாரி அம்மா அவர்கள் உடனடியாக அந்த பணி சம்பந்தமான கோப்பினை கொண்டு வரச் செய்து கையொப்பம் இடுவதற்கு பார்வையிட்ட போது 2 கோடியே 2 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது .

அதில் சின்ன குறைபாடு இருந்தது அதை உடனடியாக சரி செய்து இரண்டு நாட்களுக்குள் கையொப்பமிட்டு தலைமை செயலகத்திற்கு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் நிதி செயலரின் ஒப்புதல் கிடைத்தவுடன்  விரைவில் டெண்டர் கோரப்பட்டு அதற்கான பூமி பூஜை போடப்பட்டு விரைவில் வாய்க்கால் கட்டும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் ஆலோசகர்கள் மக்கள் சேவகர் RKR , G.P. தெய்வீகன், அன்பழகன் அவர்கள் ,சங்கத்தின் தலைவர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் குமார், கௌரவத் தலைவர் கேசவன், துணைத் தலைவர் ms. சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.!

  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Construction of canal at Mary Uzhavarkarai soon Public Works Department official assures residents welfare association


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->