அடுக்கடுக்கான புகார்..எதிர்கட்சியை வசைபாடிய MLA நேரு!
Complaints MLA Nehru lashes out at Opposition
புதுச்சேரியில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு செயல்படாதவர்கள் வருங்கால முதல்வர், நாளைய புதுச்சேரியே, புதுச்சேரியின் வருங்காலமே என்று கூறி மக்களை ஏமாளியாக பார்க்கும் வேலையை செய்துவருவதாக சட்டமன்ற உறுப்பினர் நேரு குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் நேரு கூறுகையில்:புதுச்சேரியில் எதிர்கட்சியாக இருந்து கொண்டு சிறப்பாக செயல்படாதவர்களுக்கு மத்தியில் மக்கள் பிரச்சனைக்காகவும், மாநில உரிமைக்காகவும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளான
மாநில அந்தஸ்து போராட்டம்,மின்துறை தனியார்மயமாக்க கூடாது என்று போராட்டம்,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் மற்றும் வேலைவாய்ப்பில் வயது வரம்பு தளர்த்த வேண்டும் என்று போராட்டம்,ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் பல துறைகளில் குறைபாடுகளை நிலவுவதை சுட்டிக்காட்டி நடத்திய போராட்டம்,
புதியதாக மதுபான தொழிற்சாலைகளை கொண்டு வரக்கூடாது போன்ற பல போரட்டங்களை மேற்கொண்டு தொடர்ந்து சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று பொதுநல அமைப்புகளுடன் சேர்ந்து போராடி வருகிறேன்.
அதேவேளையில் அடுத்த ஆட்சியில் நான் முதல்வன், நீ முதல்வன் என்று போட்டி போட்டு கொண்டு அவரவர் கட்சிக்குள்ளாகவே சமரசம் செய்து கொள்ளாமல் பொது வெளியில் ஓடாத வண்டி, நாங்கள் இல்லையென்றால் நீங்கள் ஒன்றுமில்லை என்று அவர்களுக்கு உள்ளாகவே காழ்புணர்ச்சியை மேடைகள் தோறும் கக்கி கொண்டு கூப்பாடு போட்டு கொண்டு மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மக்கள் சேவையில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களையும் விட்டு வைக்காமல் என்னை போன்றோரை எதிர்த்து அரசியல் செய்கிறோம் என்று கூறி கொண்டு வருங்கால முதல்வர், நாளைய புதுச்சேரியே, புதுச்சேரியின் வருங்காலமே என்று கூறி மக்களை ஏமாளியாக பார்க்கும் அவர்களின் அடிப்பொடிகள் தூண்டுதலின் பேரில்புதுச்சேரி, உருளையன்பேட்டை தொகுதி. இளங்கோ நகர் அருகில் உள்ள சாந்தி நகரில் எனது மகன் குடியிருக்கும் இடத்தில் 01.05.2025 அன்று இரவு சுமார் 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் மதுபோதையில் கூச்சலிட்டு கலாட்டா செய்தனர் என சட்டமன்ற உறுப்பினர் நேரு
கூறினார்.
English Summary
Complaints MLA Nehru lashes out at Opposition