குடிநீர் தொடர்பான புகார்..தொலைபேசி எண்களை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!
Complaint about drinking water District collector announced the phone numbers
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட, ஒன்றிய அளவில் பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினாலும் தனி அலுவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருவதாலும் குடிநீர் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் விவரப்படி வாட்ஸ்அப் எண். மற்றும் கட்டுப்பாட்டு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அத்தகைய வாட்ஸ்அப் எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் தொடர்பான புகார்கள் மட்டும் வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி புகார் தெரிவிக்கும் போது புகார்தாரரின் பெயர் மற்றும் முகவரியுடன் புகார்கள் தெரிவிக்கலாம்.
மேலும் குடிநீர் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு உதவி மையம் உருவாக்கப்பட்டு, பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி குடிநீர் தொடர்பாக மாவட்ட அளவிலான உதவி மைய எண். 9445346311,வட்டார அளவிலான உதவி மைய எண் : எல்லாபுரம் 7708269571,கும்மிடிப்பூண்டி 7548801201,கடம்பத்தூர் 7305921319,மீஞ்சூர் 7904665459,பள்ளிப்பட்டு 8220804959,பூவிருந்தவல்லி 7010044876,பூண்டி 6385348540,புழல் 7010559670,இரா.கி.பேட்டை 7708736007,சோழவரம் 7558198922,திருத்தணி 7904996062,திருவாலங்காடு 7550177471,திருவள்ளூர் 7550147704,வில்லிவாக்கம் 7540028312 ஆகிய எண்களில் மாவட்ட அளவில் ஒன்றிய அளவில் தொலைபேசி மூலமாகவோ அல்லது whatsapp மூலமாகவோ பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.
English Summary
Complaint about drinking water District collector announced the phone numbers